News August 11, 2024

வேலூர் ரயில் காட்பாடி வரை மட்டுமே இயங்கும்

image

அரக்கோணத்தில் இருந்து தினமும் காலை 7:20 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் வரை மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஆக.12 முதல் ஆக.14 வரை காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோன்று மறு மார்க்கத்தில் வேலூர் கண்டோன்மெண்டில் இருந்து அரக்கோணத்திற்கு காலை 10 மணிக்கு இயக்கப்படும் ரயிலானது காட்பாடியில் இருந்து மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே இன்று தெரிவித்துள்ளது.

Similar News

News December 9, 2025

ராணிப்பேட்டை ஆட்சியரின் வேண்டுகோள்!

image

நாட்டைக் காக்கும் படைவீரர்களின் நலனுக்காக கொடி நாள் நிதியை தாராளமாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெ. யு. சந்திரகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். படைவீரர் கொடிநாள் 2025 நிதி சேகரிப்பை உண்டியல் மூலம் நிதி செலுத்தி தொடங்கி வைத்தார். வீரமரணமடைந்தவர்களின் குடும்பம், ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட 615 பேருக்கு ரூ. 1.19 கோடி மதிப்பிலான திருமண நிதி, கல்வி உதவி உள்ளிட்ட நலனுதவிகள் வழங்கப்பட்டது.

News December 9, 2025

ராணிப்பேட்டை மக்களே.., 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <>இங்கு <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

ராணிப்பேட்டை: லஞ்சம் கேட்டால், உடனே CALL!

image

ராணிப்பேட்டை மக்களே.., வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04172-299200) புகாரளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!