News December 6, 2024
வேலூர் முதல்வர் மருந்தகம் அமைக்க கால அவகாசம் நீட்டிப்பு

வேலூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் நேற்று டிசம்பர் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி முதல்வர் மருந்தகம் அமைக்க வருகிற 10-ந் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் திருகுண ஐயப்பதுரை தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
வேலூர்: சாலையை கடக்க முயன்றவர் பைக் மோதி பலி!

காட்பாடி அரும்பருதி பகுதியை சேர்ந்தவர் நீலமேகன் (56), கூலித்தொழிலாளி. இவர் நேற்று (டிச.4) திருவலம்-காட்பாடி சாலையை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த பைக் நீலமேகன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் நீலமேகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பிரம்மபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
வேலூர்: நாளை மின்தடை எற்படும் பகுதிகள்!

வேலூர், மேல்பாடி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (டிச.6) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வெப்பாலை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசக்குப்பம், பொன்னை, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொண்டகுப்பம், குமணதாங்கள், பெருமாள் குப்பம், கோட்டநத்தம் மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படும்.
News December 5, 2025
வேலூர்: பெண்களின் பாதுகாப்பு எண்கள்!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்


