News April 7, 2025
வேலூர் மாவட்ட மக்கள் குறைத்தீர் கூட்டம் நிறைவு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (ஏப்ரல் 7) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 671 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் வேலூர் டி ஆர் ஓ மாலதி, வருவாய் கோட்டாட்சியர் செந்தில் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 13, 2025
வேலூர்: நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது!

வேலூர், காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற பெண்ணிடம், நெல்லையை சேர்ந்த இளைஞர் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆக.5ம் தேதி நடந்த இச்சம்பவத்தின் அடிப்படையில், அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று (டிச.12) காட்பாடி ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த குற்றவாளி அஸ்வின் என்பவரை விசாரித்து, அவர் தான் என்பதை உறுதிசெய்து காட்பாடி போலீசார் கைது செய்தனர்.
News December 13, 2025
வேலூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி!

வேலூர் பழைய பைபாஸ் சாலையில் நேற்று (டிச.12) அதிகாலை 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனியார் ஓட்டல் அருகே நடந்து சென்றார். நேஷனல் சர்க்கிளில் இருந்து வேலூர் நோக்கி சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அந்த பெண் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.