News September 27, 2024
வேலூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் அழைப்பு

கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் “வேலூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா” கோட்டை மைதானத்தில் நாளை செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் 400 கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளோடு நடைபெறவுள்ளது. எனவே வேலூர் மாவட்ட மக்கள் வருகைதந்து நம் மண்ணின் கலைகளை கண்டு களித்து கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் (செப்ட. 18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.
News September 18, 2025
வேலூர் ஆட்சியர் மக்களுக்கு புதிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் உள்ள நீரில் பொதுமக்கள் குளிப்பதோ, குழந்தைகளை நீரில் விளையாட அனுமதிப்பதோ, துணிகள் துவைப்பதோ, ஆற்றினை கடந்து செல்வதோ கூடாது. மேலும் தேவையின்றி மழை நேரத்தில் வெளியே வருவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (செப் ,18 ) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
JUST IN:வேலூர் மாவட்டத்தில் 8 போலி டாக்டர்கள் கைது

வேலூர் மாவட்டத்தில் எஸ்பி மயில்வாகனன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ஆகியோர் இணைந்து போலி மருத்துவர்களை கண்டறிய இன்று (செப்டம்பர் 18) திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மாவட்டம் முழுவதும் 8 நபர்கள் போலியாக மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ சாதனங்களை பறிமுதல் செய்த போலீசார் 8 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.