News August 8, 2024
வேலூர் மாவட்ட எஸ்.பி. மாற்றம்

தமிழ்நாட்டில் 24 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், சேலம் மாவட்ட துணை ஆணையராக பணியாற்றி வந்த மதிவாணன், வேலூர் மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்ட்டுள்ளார். ஏற்கெனவே, வேலூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த மணிவண்ணன் மாற்றம் செய்ப்பட்டுள்ளார். ஆனால், அதன் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
Similar News
News November 9, 2025
வேலூர்: உடல் எரிந்து மூதாட்டி பலி!

வேலூர், கட்டுப்படியை சேர்ந்தவர் காந்தாமாள்(85). இவர் கடந்த 31ம் தேதி வீட்டின் பூஜை அறையில் கற்பூரம் ஏற்றியபோது எதிர்பாராத விதமாக சேலையில் தீ பிடித்தது. இதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (நவ.08) பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 9, 2025
வேலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 9, 2025
வேலூர்: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <


