News April 15, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியரின் இன்றைய அறிவிப்பு

image

மாவட்ட நிர்வாகம் சார்பில்  ஸ்டார் அகாடமி மூலம் 12 முதல் 21 வயதிற்குப்பட்டோருக்கு  இறகுப்பந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பயிற்றுநர் பதவி நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பத்தை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்று ஏப்ரல் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் நேரிலோ அல்லது 7401703483 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 19, 2025

வேலூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.18) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 18, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி!

image

வேலூர், பெருமுகை ஊராட்சி மன்ற தலைவராக புஷ்பராஜ் என்பவர் உள்ளார். இந்த ஊராட்சியில் பெருமளவு நிதி முறைகேடு நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பராஜூக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த விசாரணைக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஊராட்சி மன்ற தலைவரின் செக் பவரை ரத்து செய்து கலெக்டர் சுப்புலட்சுமி இன்று அதிரடி உத்தரவிட்டார்.

News November 18, 2025

வேலூர்: தமிழிசை முன்னிலையில் SIR விளக்க கூட்டம்!

image

வேலூர், பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்ட நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (நவ.18) நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்ஐஆர் வாக்காளர் திருத்த பணிகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது. இதில், பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!