News October 23, 2024
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எதிரான வன்கொடுமைகள் குறித்த புகார் அளிக்க 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் அரசு விடுமுறை நாட்கள் நீங்களாக அலுவலக நாட்களில் அலுவலக பணிநேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (அக்டோபர் 23) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 25, 2025
வேலூர் மக்களே கேஸ் புக் பண்ண ஒரு Hi போதும்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News December 25, 2025
வேலூர்: 600 போலீசார் விரைந்தனர்!

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக வரும் டிச.26, 27 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். இதை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் இரு மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக கள்ளக்குறிச்சி சென்றுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
News December 25, 2025
வேலூர் மக்களுக்கு SP கிறிஸ்துமஸ் நல்வாழ்த்து!

உலகம் முழுவதும் இன்று (டிச-25) கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், மாவட்ட காவல்துறை சார்பாக அனைவருக்கும் தனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.


