News April 15, 2024

வேலூர் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 10 வழக்குகள் பதிவு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஏப்ரல் 14) காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் 330 லிட்டர் கள்ளச்சாராயம், 110 மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒரே நாளில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 9, 2025

வேலூரில் அடையாளம் தெரியாத முதியவர் பலி

image

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 60வயது முதியவர் மயங்கி கிடப்பதாக நேற்று புகார் வந்துள்ளது. அதன் பேரில் சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று முதியோரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (நவ.09) பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து. இறந்த முதல்வர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றன.

News November 9, 2025

வேலூர்: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

வேலூர், கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் வரும் நவம்பர் 11-ம் தேதி (செவ்வாய் கிழமை) நடைபெற உள்ளது. இதில் அரசு அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே கே.வி. குப்பம் தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிகள் தங்கள் குறைகளை கோரிக்கைகளை மனுவாக அளித்து தெரிவிக்கலாம் என தாசில்தார் பலராமன் தெரிவித்துள்ளார்.

News November 9, 2025

வேலூர்: உடல் எரிந்து மூதாட்டி பலி!

image

வேலூர், கட்டுப்படியை சேர்ந்தவர் காந்தாமாள்(85). இவர் கடந்த 31ம் தேதி வீட்டின் பூஜை அறையில் கற்பூரம் ஏற்றியபோது எதிர்பாராத விதமாக சேலையில் தீ பிடித்தது. இதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (நவ.08) பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!