News January 22, 2025
வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜனவரி 22) நடத்திய சோதனையில் 9 மது பாட்டில்கள், 2.200 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் இன்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 22, 2025
வேலூரில் 300 ஏக்கர் சாமை பயிர் சேதம்

வேலூர்: ஒடுகத்தூர் பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் ஒடுகத்தூர் சுற்றுப்பகுதியில் உள்ள தீர்த்தம், கொட்டாவூர், கெங்கசாணிகுப்பம், சேர்பாடி, வண்ணாந்தாங்கல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் 300 ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த சாமை பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. சேதமடைந்துள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News October 22, 2025
வேலூர் சரகத்தில் ஆம்னி பஸ்களுக்கு அபராதம்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் சரகத்தில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை நடத்தினர். அதில் 4 மாவட்டங்களில் மொத்தம் 326 ஆம்னி பஸ்களை ஆய்வு செய்தனர். அதில் 24 பஸ்கள் வரி செலுத்தாமல் இயக்கியது தெரியவந்தது. அந்த பஸ்களுக்கு ரூ. 16,05,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
News October 22, 2025
வேலூரில் 4 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி

வேலூர்: குடியாத்தம் அடுத்த கூடநகரம் ஏரி 174 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 26 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டதாகும். தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு கூடநகரம் ஏரி நிரம்பி வழிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பூக்களை தூவி வரவேற்று மகிழ்ந்தனர். மேலும் நீர்வளத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.