News March 20, 2024

வேலூர் மாவட்டம் முழுவதும் 519 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் 732 துப்பாக்கிகள் உரிமம் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இதில் 519 துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 212 துப்பாக்கிகள் வங்கி பயன்பாட்டிற்காக சான்று வழங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு துப்பாக்கி இன்னும் ஒப்படைக்கப்பட வேண்டியுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 19, 2026

வேலூரில் அரங்கேறிய கொடூரம்!

image

கே.வி.குப்பத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி உடல் நிலை சரி இல்லாததால் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. விசாரணையில் போளூரை சேர்ந்த உறவினர் ஜெயபிரகாஷ் (39) மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குடியாத்தம் மகளிர் போலீசார் நேற்று இரவு ஜெயபிரகாஷை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

News February 19, 2026

வேலூரில் கழுத்து இறுக்கி சிறுமி பலி!

image

விரிஞ்சிபுரம் அருகே குடிசை கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சத்யபிரியா. இவர்களது மகள் ஜீவிதா (9). சிறுமி ஜீவிதா வீட்டின் ஜன்னலில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சேலை எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் இறுக்கியது. இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 19, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.18) இரவு முதல் இன்று (பிப்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!