News March 20, 2024

வேலூர் மாவட்டம் முழுவதும் 519 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் 732 துப்பாக்கிகள் உரிமம் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இதில் 519 துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 212 துப்பாக்கிகள் வங்கி பயன்பாட்டிற்காக சான்று வழங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு துப்பாக்கி இன்னும் ஒப்படைக்கப்பட வேண்டியுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 9, 2025

வேலூர்: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா..?

image

வேலூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள<> இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் அணுகலாம். (SHARE IT)

News December 9, 2025

வேலூர் கலெக்டர் அறிவித்தார்!

image

வேலூரில் 8 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்‌. அதன்படி காட்பாடி தாலுகா துணை தாசில்தார் துளசிராமன், காட்பாடி தேர்தல் துணை தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த குமார், கலெக்டர் அலுவலக ‘எப்’ பிரிவு தலைமை உதவியாளராகவும், வருவாய் கோட்ட துணை தாசில்தார் வாசுகி, கலெக்டர் அலுவலக ‘ஈ’ பிரிவு கண்காணிப்பாளராகவும், இதேபோல் 8 பேர் பணியிட மாற்றப்பட்டுள்ளனர்.‌

News December 9, 2025

வேலூரில் மலிவு விலையில் வாகனம்!

image

வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த வாகனம் முதிரா நிலையில் கழிவு செய்யப்பட்டு எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 22ஆம் தேதி காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. மேலும் வாகனத்தினை பார்வையிட விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் பார்வையிட அனுமதிக்கப்படுவர் என வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!