News August 3, 2024
வேலூர் மாவட்டத்தில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வேலூர் மாவட்டத்தில் தொடர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்த விஜய், நெடுஞ்செழியன், விக்னேஷ் மற்றும் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொலை குற்ற வழக்குகளில் தொடர்புடைய அருள்பாண்டியன், வேலு ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி மணிவண்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று(ஆகஸ்ட் 2) உத்தரவிட்டார்.
Similar News
News November 10, 2025
வேலூர்: இன்றே கடைசி- APPLY HERE!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று நவ.10. 5) விண்ணப்பிக்க: <
News November 10, 2025
வேலூரில் நாளை மின் தடை

வேலூரில் நாளை (நவ.11) காலை 9 மணி முதல் 5 மணி வரை புதிய பேருந்து நிலையம், தோட்டப்பாளையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, அண்ணா சாலை, அப்துல்லாபுரம், கிருஷ்ணா நகர், பிஷப் டேவிட் நகர், கஸ்பா, கொணவட்டம், கொசப்பேட்டை, ஓல்ட் டவுன், சார்பனா மேடு, இறைவன்காடு: வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, மருதவல்லிபாளையம், அன்பூண்டி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதியிலும் மின் தடை ஏற்படும்
News November 10, 2025
வேலூரில் 1,056 பேர் ஆப்சென்ட்!

வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்கு 9,561 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத வி.ஐ.டி. பல்கலைக்கழகம், தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, ஸ்ரீபுரம் ஸ்பார்க் பள்ளி ஆகிய 3 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் 8,505 பேர் எழுதினர் எனவும், 1,056 பேர் எழுத வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


