News March 29, 2024

வேலூர் மாவட்டத்தில் 2641 நபர்களுக்கு தபால் வாக்கு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் நபர்கள் என மொத்தம் 2, 641 நபர்கள் தங்கள் வாக்கினை தபால் வாக்குகள் மூலம் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான  சுப்புலெட்சுமி இன்று (மார்ச் 29) தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 18, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி!

image

வேலூர், பெருமுகை ஊராட்சி மன்ற தலைவராக புஷ்பராஜ் என்பவர் உள்ளார். இந்த ஊராட்சியில் பெருமளவு நிதி முறைகேடு நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பராஜூக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த விசாரணைக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஊராட்சி மன்ற தலைவரின் செக் பவரை ரத்து செய்து கலெக்டர் சுப்புலட்சுமி இன்று அதிரடி உத்தரவிட்டார்.

News November 18, 2025

வேலூர்: தமிழிசை முன்னிலையில் SIR விளக்க கூட்டம்!

image

வேலூர், பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்ட நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (நவ.18) நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்ஐஆர் வாக்காளர் திருத்த பணிகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது. இதில், பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News November 18, 2025

வேலூர்: உங்களிடம் செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <>இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் & உங்களின் தகவல்களை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்பட்டு, பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் 5 லட்சம் மொபைல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷேர்!

error: Content is protected !!