News May 14, 2024

வேலூர் மாவட்டத்தில் 15 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

image

வேலூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 140 பள்ளிகளில் இருந்து 7762 மாணவர்களும், 8473 மாணவியரும் தேர்வு எழுதினர். இதில் 5764 மாணவர்களும், 7452 மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 81.40 சதவிகிதமாகும். 15 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. இதில் 1 அரசுப் பள்ளி அடங்கும் என இன்று (மே 14) பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News April 21, 2025

வேலூரில் வாட்டி வதைக்கும் வெயில்

image

வேலூரில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

image

போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

காளை முட்டி இளைஞர் உயிரிழப்பு

image

குடியாத்தம் அடுத்த அணங்காநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அ.மோட்டூர் கிராமத்தில், 20ஆம் ஆண்டு எருது விடும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில், 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. எருது நிகழ்ச்சியைக் காண அகரம் கிராமத்தைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் வந்தனர். காளை முட்டியதில் பலத்த காயமடைந்த பரந்தாமன் (32) என்பவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

error: Content is protected !!