News August 18, 2024
வேலூர் மாவட்டத்தில் 104 மது பாட்டில்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 18) நடத்திய சோதனையில் 104 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
வேலூர்: திடீரென தீப்பற்றி எரிந்த கார்.. பரபரப்பு!

வேலூர், குடியாத்தம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் நேற்றிரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 27, 2025
வேலூரில் இருந்து 100 போலீசார் பயணம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழா பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து முதற்கட்டமாக 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 100 போலீசார் நேற்று (நவ.26) திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றனர். தீபத்திருவிழா முடிந்த பின்னர் 4-ந்தேதி அவர்கள் வேலூருக்கு திரும்பி வர உள்ளனர் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 27, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று (நவ.26) இரவு – இன்று காலை (நவ .27) வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க இதனை தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்!


