News April 18, 2025
வேலூர் மாவட்டத்தில் 101 மது பாட்டில்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 18) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 101 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
வேலூர்: மாதம் ரூ.15,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

வேலூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் TELEMARKETER பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு BE, B.TECH படித்திருக்க வேண்டும். 25-35 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21. விருப்பமுள்ளவர்கள் இந்த <
News September 19, 2025
வேலூர்: கஷ்டங்களை நீக்கும் கால பைரவர்!

வேலூர் மாவட்டம் செங்காநத்தம் மலையில் காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 10 கைகளுடன் 3 1/2 அடி உயரத்தில் பைரவர் அருள்பாலிக்கிறார். மிகவும் சக்திவாய்ந்த இந்த கோவிலில் வழிபட்டால் திருமண தடை நீங்கும் மற்றும் குழந்தை வரம் கிடைக்கும். மேலும், 108 ஒரு ரூபாய் நாணயத்தால் அபிஷேகம் செய்தால் பணக்கஷ்டம் மற்றும் இழந்த செல்வத்தை மீட்கலாம் என்பது ஐதீகம். *கடனில் சிக்கியவர்களுக்கு பகிரவும்*
News September 19, 2025
வேலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

வேலூர் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!