News October 10, 2024
வேலூர் மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

வேலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. எனவே, வெளியே செல்வோர் குடை அல்லது ரெயின் கோர்ட்டுடன் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News December 12, 2025
BREAKING: வேலூர் வருகிறார் அமித்ஷா

வேலூரில் வருகின்ற 15ம் தேதி நடைபெற இருக்கும் கட்சி நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் கட்சி விரிவாக்கம், தேர்தல் பணிகள் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமியை நேற்று (டிச.11) சந்தித்து பேசியது குறித்த தகவல்களை நயினார் அமித்ஷாவிடம் பகிர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
News December 12, 2025
வேலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
News December 12, 2025
வேலூரில் பைக் திருட்டு: இளைஞர்களுக்கு 3 ஆண்டு சிறை!

வேலூர் மாவட்டத்தில் பைக் திருடியதாக 22 மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்கள் மீது நடைபெற்ற வழக்கில், வேலூர் நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்தது. இதன்பேரில் இருவருக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சமீப காலமாக பிரதேசத்தில் அதிகரித்து வரும் வாகன திருட்டுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.


