News December 5, 2024

வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

image

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஃபெஞ்சல் புயல் காரணமாக வேலூர்,சென்னை,கள்ளக்குறிச்சி,திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. அதன் தாக்கம் முடிவதற்குள் நேற்று நள்ளிரவு வேலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா என்பதை கமென்டில் குறிப்பிடவும்.

Similar News

News December 23, 2025

வேலூரில் மின்தடை – இதுல உங்க ஏரியா இருக்கா?

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (23.12.2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்: வேலூர், தோட்டப்பாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோனாவட்டம், போகை, சேதுவளை, காந்தி சாலை, அதிகாரிகள் லைன், பழைய நகரம், வசந்தபுரம், சலவன்பேட்டை, செல்வபுரம், கஸ்பா, வேலூர் பஜார், சேதுவளை, விஞ்சிபுரம், எம்.வி. பாளையம், பொய்கை, பொய்கைமோட்டூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

News December 23, 2025

வேலூர்: வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு!

image

பள்ளிகொண்டா, சின்னசேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் விவசாய நிலத்தில் பேபி (72) என்பவர் சொந்தமாக வீடு கட்டி தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் மகன் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து மூதாட்டியை தாக்கி விட்டு அவர் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க நகையை பறித்து சென்றனர். மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 23, 2025

வேலூர், வரும் 28-ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம்

image

வேலூர் மாவட்ட வெல்லம் மண்டி வியாபாரிகள் சங்கம் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து வரும் டிசம்பர் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காட்பாடி காந்தி நகரில் உள்ள ரங்காலயா திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. எனவே இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!