News August 4, 2024
வேலூர் மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களளில் பணிபுரியும் 45 காவல் ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி சரோஜ் குமார் தாக்கூர் நேற்று வெளியிட்டுள்ளார். மேலும், அந்ததந்த மாவட்ட எஸ்பி-க்கள் மாற்றம் பெற்றவர்களுக்கு ஆணையை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
வேலூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க!
News December 3, 2025
வேலூர்: வரதட்சணை சித்திரவதை – இளம்பெண் திடீர் சாவு

பள்ளிகொண்டா அடுத்த வல்லாண்டராமம் பனங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதன். இவரது மனைவி கோகுலா(20). கோகுலா சீர்வரிசை கொண்டு வரவில்லை எனக்கூறி மதன், அவரது குடும்பத்தினர் கோகுலாவை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு உடல்நிலை பாதிக்கப்பட்ட கோகுலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 3, 2025
வேலூரில் 3.5 டன் ரேஷன் அரிசி கடத்தல்!

வேலூர்: பொன்னை அருகே மாநில எல்லை சோதனை சாவடியில் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 3.5 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட பிரவீன் (33), ராஜா (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியையும், அரிசியையும் பறிமுதல் செய்து உணவு கடத்தல் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


