News April 29, 2025

வேலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா வருகிற மே மாதம் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஏனையோர் கலந்து கொள்ள வசதியாக மே 15 அன்று உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். அதற்கு பதிலாக ஜூன் 14-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News April 29, 2025

வேலூர்: அரசு கல்லூரி எண்களை தெரிஞ்சிக்கோங்க

image

12th முடித்து காலேஜ் அட்மிசனுக்கு காத்திருப்போருக்கு இதை பகிரவும். வேலூர் அரசு கல்வியல் கல்லூரி-0416-2249703, திருமகள் மில்ஸ் காலேஜ்-04171-220162, வேலூர் மருத்துவ கல்லூரி- 0416-2260900, ஊரிசு கல்லூரி- 0416-2220317, திருவள்ளூவர் யுனிவர்சிட்டி-0416-2274100, MGR ஆர்ட்ஸ் காலேஜ்-04174259556, முத்துரங்கம் கலைக்கல்லூரி-0416-2262068, ஆக்ஸிலியம் கல்லூரி-0416-2241774, DKM மகளிர் காலேஜ்-0416-2266051.

News April 29, 2025

வேலூர்: பேட்மிண்டன் விளையாட்டு இலவச பயிற்சி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூர் பிரிவு சார்பில் காட்பாடியில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் ஸ்டார் அகாடமி பேட்மிண்டன் பயிற்சி மையம் வரும் மே 1-ந் தேதி தொடங்கப்படுகிறது. இதில் 20 ஆண்கள், 20 பெண்கள் என மொத்தம் 40 பேருக்கு பேட்மிண்டன் விளையாட்டு பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான மாணவர்கள் தேர்வு நேற்று மாவட்ட விளையாட்டு மையத்தில் நடந்தது. ஷேர் பண்ணுங்க

News April 29, 2025

குடியாத்தம் போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை

image

குடியாத்தம் பகுதியை சேர்ந்த பீடி தொழிலாளி இலியாஸ் (54). கடந்த 2019-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குடியாத்தம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இலியாஸ்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!