News April 11, 2024
வேலூர்: மணல் கடத்திய 2 பேர் கைது
குடியாத்தம் அம்மணாங்குப்பம் ஆற்றில் இருந்து மணல் கடத்துவதாக நேற்று (ஏப்ரல் 10) குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் ஆற்று மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து மணல் கடத்திய வழக்கில் மணிவண்ணன் (51), பிரபு (32) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
Similar News
News November 20, 2024
யானை தந்தம் பதுக்கிய வழக்கில் 9 பேர் அதிரடி கைது
வேலூர் மாவட்டம், அரியூரில் உள்ள ஒரு வீட்டில் யானை தந்தம் ஒதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் நடத்திய சோதனையில் யானைத் தந்தம் பதுக்கி வைத்திருந்த பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் சரத்குமார் (32), சம்பத் (57), மணிகண்டன் (37), குமார் (37), அனீப் (52), பழனி (68), தனபால் (63), ரவி (52), தரணிகுமார் (57) ஆகிய 9 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
News November 20, 2024
வேலூர் மாவட்டத்தில் 14 போலீசார் பணியிட மாற்றம் எஸ்பி உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் ஏட்டு மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி விருஞ்சிபுரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நடராஜன் சத்துவாச்சாரிக்கும், மேல்பாடியில் ஏட்டு சிவக்குமார் விருதுபட்டுக்கும் என மாவட்டம் முழுவதும் 14 போலீசாரை பணியிட மாற்றம் செய்து எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.
News November 19, 2024
காவல்துறை இரவு ரோந்து பணி வெளியீடு
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.