News April 25, 2025
வேலூர் பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள்

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. குடியாத்தம்- 04171 229100 , வேலூர்- 0416 2221204. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.
Similar News
News April 28, 2025
காட்பாடி ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

காட்பாடி சேனூரைச் சேர்ந்த பிரதீப் (17) 10ம் வகுப்பு மாணவன். இவர் நேற்று தனது நண்பர்களுடன் வீரக்கோயில் மேட்டில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதியில் இறங்கி குளித்த போது திடீரென மூழ்கினார். சக நண்பர்கள் போராடி மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விருதம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 28, 2025
மருத்துவ மாணவரிடம் ரூ.11 லட்சம் மோசடி

வேலூர், தனியார் மருத்துவ கல்லூரியில் 27 வயது மாணவர் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார். இவரது கைப்பேசி எண்ணுக்கு டெலிகிராம் செயலியில் ஆன்லைன் பகுதி நேரம் மூலம் சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி வந்துள்ளது. அவர்களின் ஆசை வார்த்தையை நம்பி பல தவணைகளாக மொத்தம் ரூ11 லட்சம் முதலீடு செய்துள்ளார். மேலும் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும் என கூறிய போது ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவர் போலீசில் புகார் அளித்தார்.
News April 28, 2025
வேலூர் இறகு பந்து பயிற்சி வீரர்கள் தேர்வு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஸ்டார் அகாடெமி இறகு பந்து பயிற்சி மையத்திற்கு வீரர்கள் தேர்வு நாளை (ஏப்ரல் 28) காலை 6:30 மணியளவில் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 12 வயது முதல் 20 வயதுக்குள் உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு விளையாட்டு வீரர்களுக்கு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.