News March 26, 2025
வேலூர் பிஎஃப் அலுவலகம் சார்பில் நாளை சிறப்பு முகாம்

வேலூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ‘நிதிஆப்கே நிகட் 2.0’ எனும் முகாம் நாளை (மார்ச் 27) வேலூர் ஜி.பி.எச். சாலையிலுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள், தொழிலாளர்களின் கடமைகள், பொறுப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் எம்.எச்.வார்சி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
வேலூர்: சூதாடிய வாலிபர் கையும் களவுமாக கைது!

வேலூர் மாவட்டம் கருகம்புத்தூரில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக விரிஞ்சிபுரம் போலீசாருக்கு நேற்று (நவ.21) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல் (27) என்ற வாலிபரை போலீசார் கையும் களவுமாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 21, 2025
வேலூர்: 10th தகுதி… மத்திய அரசு வேலை ரெடி

வேலூர் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 21, 2025
வேலூர்: கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (நவ.21) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


