News October 23, 2024
வேலூர் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று (அக்டோபர் 22) நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் உமா திருநங்கைகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 27, 2025
வேலூர்: கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு!

வேலூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 12 வயதுக்கு உட்பட்ட இளம் வீரர்களுக்கான தேர்வு வரும் 30-ம் தேதி வேலூர் புதிய பைபாஸ் சாலையில் உள்ள ராஜேஸ்வரி அம்மையார் வளாகத்தில் நடைபெறுகிறது. இதில், வயது சான்றிதழ், ஆதார் கார்டு, கிரிக்கெட் சீருடையுடன் கலந்து கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு கிரிக்கெட் சங்க கவுரவ செயலாளர் ஸ்ரீதரனை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஜி.வி.சம்பத் தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
வேலூர்: விலை கிடுகிடுவென உயர்ந்தது…!

ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு தினமும் 80 டன் தக்காளிகள் வந்து கொண்டிருந்தது. தற்போது அங்கு பெய்து வரும் மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 20 டன் அளவிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் 35-40 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
News November 27, 2025
வேலூர்: 15 லட்சத்திற்கு வாகனங்கள் பொது ஏலம்!

வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் ஏலம் நேற்று (நவ.27) நடந்தது. இந்த ஏலத்தை எஸ்.பி. மயில்வாகனன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் 66 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 15 லட்சத்து 20 ஆயிரத்து 448 ரூபாய்க்கு பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.


