News May 16, 2024
வேலூர்: தலையில் கல்லை போட்டு கொலை… கைது!

குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரில் கடந்த மாதம் தூங்கிக் கொண்டிருந்த சின்னக்குழந்தை (75) என்பவர் தலையின் மீது தரணி என்பவர் கல்லை போட்டு கொலை செய்து விட்டு ஓடிவிட்டார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து தரணியை நேற்று கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
Similar News
News July 11, 2025
துயரம் நீங்கும் வில்வனாதேஸ்வரர்

வேலூரில் சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவலம் ஸ்ரீ வில்வனாதேஸ்வரர் கோயில். இது தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள சிவன் வில்வ இலைகளால் பூஜிக்கப்பட்டதால் வில்வனாதேஸ்வரர் என்று பெயர் பெற்றதாக ஐதீகம். இந்த கோயில் மன அமைதிக்கு ஒரு புகலிடமாக திகழ்கிறது. வாழ்க்கையில் தொடர்ந்து துயரங்களை சந்திப்பவர்கள் இங்கு வந்து மனமுருகி வேண்டினால் துயரம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர்!
News July 11, 2025
குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

▶வேலூரில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
▶தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News July 11, 2025
ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 2/2

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்.
▶இந்த <