News April 27, 2025
வேலூர்: தலைமறைவான குற்றவாளி கைது

பேரணாம்பட்டு டவுன் பகுதியைச் சேர்ந்த இம்ரான் அஹம்மத் (25) மீது திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு இம்ரான் அஹம்மத் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து இம்ரான் அஹம்மத் மீது ஜாமீனில் வெளியில் வராதவாறு பிடிவாரண்ட் பிறப்பித்து கைது செய்யுமாறு பேரணாம்பட்டு போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி போலீசார் சென்னையில் பதுங்கியிருந்த இம்ரான் அஹமதை நேற்று கைது செய்தனர்.
Similar News
News November 21, 2025
வேலூர்: பணம் கேட்டு மிரட்டிய முன்னாள் காதலி!

வேலூர்: சலவன்பேட்டையைச் சேர்ந்த இசைக்கலைஞர் (38), 2008ல் கல்லூரி படிக்கும் போது பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். அப்போது அந்த பெண் கர்ப்பமடைந்தது வீட்டாருக்கு தெரிந்த நிலையில், 2 பேரையும் பிரித்து, வேறு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், தற்போது அந்த பெண், இசை கலைஞருக்கு ரூ.7 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, அந்நபர் நேற்று (நவ.20) பாகாயம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
News November 21, 2025
வேலூரில் 658 பேருக்கு ரத்து!

வேலூரில் கடந்த ஜனவரி – அக்டோபர் வரை போலீசார் பரிந்துரையின் பேரில், மொத்தம் 658 பேரின் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக 73 பேர், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 85 பேர், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 129 பேர், செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டியதாக 14 பேரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
News November 20, 2025
வேலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களான குடியாத்தம், காட்பாடி, கே.வி. குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (நவ.20) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


