News March 29, 2024
வேலூர்: தங்க கவச அலங்காரத்தில் செல்லியம்மன்

வேலூர் மாவட்டம் புதிய பஸ் நிலையம் அருகே இது சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று (மார்ச் 29) அம்மனுக்கு சிறப்பு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் சார்பில் குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
Similar News
News November 8, 2025
வேலூர்:பாலத்தின் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து!

பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (நவ.7) இரவு கண்டெய்னர் லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த சிறு பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் லாரியின் முன்பக்க சக்கரங்கள் உடைந்து ரோட்டில் ஓடின. கன்டெய்னர் லாரி டிரைவர் எந்தவித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 8, 2025
வேலூர்: பட்டாவில் பெயர் மாற்றமா? இனி ஈஸி!

வேலூர் மக்களே! உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.
இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு <
News November 8, 2025
வேலூர் இன்னும் சற்று நேரத்தில் சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய 6 தாலுகாவிலும் இன்று (நவ.8) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு திருத்த முகம் நடைபெற உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.


