News September 15, 2024
வேலூர் ஜெயிலர் உள்பட நான்கு பேருக்கு சிபிசிஐடி சம்மன்

வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியது மற்றும் நகை திருடியதாக தாக்கிய வழக்கில் தொடர்புடைய ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாவலர் ராஜூ உள்பட 4 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கி உள்ளனர். இவர்கள் நாளை (செப்டம்பர் 16) சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
வேலூரில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நாளை( நவ.15) பராமரிப்பு காரணமாக மின் தடை செய்யப்படவுள்ளது. அதன்படி குடியாத்தம், பேரணாம்பட்டு, வள்ளிமலை, வடகாத்திப்பட்டி, ஒடுகத்தூர், வரதலம்பட்டு ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News November 14, 2025
வேலூர்: அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

வேலூர்: கீழ்மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிராமன் (61) டெய்லர். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. தகவலறிந்த காட்பாடி போலீசார் சென்று பார்த்தனர். அப்போது ஜோதிராமன் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News November 14, 2025
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


