News August 17, 2024
வேலூர் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று சென்னையில் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஆக 20ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
வேலூர் கோர்ட் வளாகத்திலேயே கொலை மிரட்டல்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (58). நாமக்கலை சேர்ந்தவர் பிரம்மகுரு (36). இருவரும் 2015ஆம் ஆண்டு கொலை வழக்கில், வேலூர் சத்துவாச்சாரி உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நேற்று (நவ.22) ஆஜராகினர். அப்போது விநாயகத்திற்கு பிரம்மகுரு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மேஜிஸ்திரேட்டிடம் விநாயகம் புகார் அளித்தார். இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வேலூர்: வாட்டர் வாஷ் செய்த சிறுவன் பலி

வேலூர் பலவன்சாத்து குப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கோகுல்பிரசாத் (17). இவர், ஓட்டேரி மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பிற்பகலில், கடையில் ஒரு வண்டிக்கு ‘வாட்டர் வாஷ்’ செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.