News October 25, 2024
வேலூர் கோட்டை கோயிலில் ரத்தன் டாடாவிற்கு மோட்சதீபம்

வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மறைந்த ரத்தன் டாடாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி நாளை (அக்டோபர் 25) கோயில் வளாகத்தில் உள்ள நடராஜர் சன்னதி அருகே மோட்சதீபம் ஏற்றப்பட உள்ளது என ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வேலூர் அன்பு நெஞ்சங்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
வேலூர்: பண்ணை அமைக்க விருப்பமா? ரூ.50 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News December 13, 2025
வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு திருத்தத்துக்கான சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை திருத்திக்கொள்ள 13.12.25 சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வேலூர் தாலுகாவில் கீழ்அரசம்பட்டு, அணைக்கட்டு–முகமதுபுரம், காட்பாடி–கிளிதான்பட்டரை, குடியாத்தத்தில் மேற்கு எஸ்.மோட்டூர், கே.வி.குப்பத்தில் காவனூர், பேர்ணாம்பட்டில் சொக்கரிஷிகுப்பம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை முகாம்கள் நடைபெறும்.
News December 13, 2025
வேலூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

வேலூர் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT


