News March 25, 2025
வேலூர்: கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வேலூர் மாவட்ட பிரிவு சார்பில் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் மாவட்ட விளையாட்டு அரங்கம் காட்பாடியில் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும் கூடுதல் விபரங்களுக்கு 85085 78720, 74017 03483 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News October 28, 2025
வேலூர்: தமிழ் தெரிந்தால் போதும், அரசு வேலை!

தமிழத்தில் காலியாக உள்ள 1,429 HEALTH INSPECTOR பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, MPHW/ சுகாதார ஆய்வாளர் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18-60 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் <
News October 28, 2025
வேலூரில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி தலைமையில் நேற்று (அக்.27) மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து 381 மனுக்கள் பெறப்பட்டு, துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.14,495 மதிப்பில் கைத்திறன் பேசிகள் வழங்கப்பட்டது. ஊழல் தடுப்பு வாரம் முன்னிட்டு அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
News October 28, 2025
வேலூர்: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

வேலூர் மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்.


