News May 7, 2025
வேலூர்: கூலி தொழிலாளிக்கு ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ்

குடியாத்தம் வெள்ளேரியை சேர்ந்த கவிதா தனது கணவருடன் நேற்று எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் ”நானும் எனது கணவரும் கூலி வேலைசெய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக சென்னையில் நிறுவனம் இயங்கி வருவதாகவும், ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த நிறுவனத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினர்.
Similar News
News December 2, 2025
வேலூர்: போக்சோ வழக்கில் 20 ஆண்டு கடுங்காவல்!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி.ஆ.மில்வாகனன் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு கண்காணிப்பு நடவடிக்கையின் போது, 2020ஆம் ஆண்டு கார்ட்டூன் கண்காட்சியில் சிறுமியை பாலியல் துன்புறுத்திய போக்சோ வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது. வேலூர் போக்சோ நீதிமன்றம் குற்றவாளி ராமசந்திரன் (28), காப்படி பகுதியைச் சேர்ந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தது.

வேலூரில் சாலை விபத்து!

பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் இன்று (டிச.1) வேலூர் சேண்பாக்கம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை மீட்டனர்.