News April 23, 2025
வேலூர் காவல் துறை சார்பில் செய்தி குறிப்பு

வேலூர் காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உங்கள் பகுதியில் விற்கப்படும் சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து, உங்களின் சுய விபரங்களை வெளிப்படுத்தாமல் புகாரளிக்க, Drug Free Tamil Nadu தமிழ்நாடு அரசால் அறிமுகம் செய்யப்பட்ட செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 23, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா ஆகிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News October 22, 2025
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (அக்.22) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஒருவர் பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.
News October 22, 2025
வேலூர்: நெல் நடவு இயந்திரங்கள் வழங்கிய எம்.பி

வேலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவரும் வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்த், இன்று (அக்.22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு நெல் நடவு இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கலெக்டர் சுப்புலட்சுமி, எம்எல்ஏக்கள் அமுலு விஜயன் (குடியாத்தம்), வில்வநாதன் (ஆம்பூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.