News October 24, 2024
வேலூர் காவல் துறை சார்பில் புதிய முயற்சி

வேலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை, தங்களின் குறைகளை 90927 00100 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பதிவிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரிவிக்கப்படும் தகவல்கள் அனைத்தும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
வேலூர்: நெடுந்தூர ஓட்டப்போட்டி – ஆட்சியர் தகவல்

வேலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், ஆர்வமுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 7401703483 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
வேலூர் மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு

வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் ரூ.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க .ஸ்டாலின் இன்று (நவ.05 ) திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


