News April 26, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 26) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News November 11, 2025
சபரிமலை சிறப்பு ரயில் காட்பாடி வழியாக இயக்கம்

சபரிமலை யாத்திரைக்காக தெலங்கானா மாநிலம் சார்லப்பள்ளியில் இருந்து கொல்லம் வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும். நவம்பர் 17 முதல் ஜனவரி 19 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் ரயில் இயக்கப்படும். திரும்பும் ரயில் புதன்கிழமைகளில் இயங்கும். டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
News November 11, 2025
வேலூரில் பயிர் காப்பீடு செய்ய கெடு

வேலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் நடப்பாண்டு சம்பா பருவ நெற்பயிர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொதுத்துறை வங்கிகள், அரசு பொது சேவை மையங்களை அணுகி காப்பீடு பிரீமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.544 செலுத்தி வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
News November 11, 2025
வேலூர்: பள்ளி பேருந்து மோதியதில் குழந்தை பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செட்டிகுப்பம் பகுதியில், நேற்று (நவ.10) தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மோகன் என்பவரின் ஒன்றரை வயது மகள் துர்காஸ்ரீ மீது தனியார் பள்ளி பேருந்து மோதியது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவல் அறிந்த குடியாத்தம் போலீசார் இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


