News June 25, 2024
வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் பதவியேற்பு

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Similar News
News December 2, 2025
வேலூரில் சாலை விபத்து!

பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் இன்று (டிச.1) வேலூர் சேண்பாக்கம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை மீட்டனர்.
News December 2, 2025
வேலூரில் 76 சதவீதம் பணிகள் நிறைவு.. அதிகாரிகள் தகவல்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை 12 லட்சத்து 92 ஆயிரம் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளுக்கான கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைவருக்கும் படிவம் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. அதேபோன்று பூர்த்தி செய்யப்பட்ட 9 லட்சத்து 93 ஆயிரம் கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இது 76 சதவீதமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News December 2, 2025
வேலூரில் கொடூர விபத்து!

வேலூர்: அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட அகரம் ராமாநாயணிகுப்பம் கிராமத்தில் நேற்று (டிச.1) வயலுக்கு சென்ற அப்பா இரண்டு மகன்கள் ஆகிய மூவரும் வயலுக்கு வைத்திருந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


