News May 15, 2024
வேலூர்: உயர் கல்வியில் வழிகாட்டும் நிகழ்வு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியில் வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, இன்று விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் மாலதி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 24, 2025
வேலூர்: ஆட்டோ மீது கார் மோதி விபத்து – பெண் பலி

வேலூர்: வல்லண்டராமம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு (நவ.23) முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. ஆட்டோவில் பயணம் செய்த ஜெயந்தி (54) என்பவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்: இளம்பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில்!

வேலூர்: காட்பாடி தாராபடவேட்டில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடப்பதாக காட்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று (நவ.23) மாலை அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்ட போலீசார், பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வசந்தா (52), சந்திரசேகரன் (41) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.