News April 28, 2025

வேலூர் இறகு பந்து பயிற்சி வீரர்கள் தேர்வு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஸ்டார் அகாடெமி இறகு பந்து பயிற்சி மையத்திற்கு வீரர்கள் தேர்வு நாளை (ஏப்ரல் 28) காலை 6:30 மணியளவில் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 12 வயது முதல் 20 வயதுக்குள் உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு விளையாட்டு வீரர்களுக்கு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News

News July 6, 2025

வேலூர் மாவட்ட கலெக்டரின் அறிவிப்பு

image

வேலூரில் இயங்கிவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கு மாவட்ட எல்லைக்குட்பட்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது. விண்ணப்பங்களை வரும் 21-ம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, வேலூர்-01 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News July 6, 2025

வேலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பாதுகாப்பு நடவடிக்கை

image

வேலூர் மாவட்ட காவல்துறையால் 5 ஜூலை , 2025 அன்று இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

News July 5, 2025

குழந்தை வரம் கொடுக்கும் மார்க்கபந்தீஸ்வரர்

image

வேலூரில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில், பாலாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது விருஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில். சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு பழமையான சிவன் கோயிலாகும். இங்குள்ள சிம்ம தீர்த்தத்தில் நீராடி, குழந்தை வரம் வேண்டி வரும் பெண்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணம் ஆகாதவர்கள் மார்க்கபந்தீஸ்வரரையும், மரகதாம்பிகையையும் வணங்கி நலம் பெறலாம். ஷேர்

error: Content is protected !!