News April 28, 2025
வேலூர் இறகு பந்து பயிற்சி வீரர்கள் தேர்வு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஸ்டார் அகாடெமி இறகு பந்து பயிற்சி மையத்திற்கு வீரர்கள் தேர்வு நாளை (ஏப்ரல் 28) காலை 6:30 மணியளவில் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 12 வயது முதல் 20 வயதுக்குள் உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு விளையாட்டு வீரர்களுக்கு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
வேலூர்: ஒரே நாளில் 24 வாகனங்கள் பறிமுதல்!

வேலூர்: அணைக்கட்டு அடுத்த பீஞ்சைமந்தை, அல்லேரி, ஜார்தான் கொள்ளை, பட்டி குடிசை ஆகிய மலைப்பகுதிகளில் திருட்டு வாகனங்களை அதிகம் பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று (நவ. 15) அணைக்கட்டு டிஎஸ்பி நந்தகுமார் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனைகள் முறையான ஆவணங்கள் இல்லாத 24 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
News November 16, 2025
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.*
News November 15, 2025
பென்னாத்தூர்: வாக்காளர் படிவங்கள் திரும்ப பெரும் பணி

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி பென்னாத்தூர் பேரூராட்சி கேசவபுரம் பள்ளிதெருவில் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்கள் திரும்பப்பெறும் பணிகளை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (நவ.15) பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.


