News March 21, 2024
வேலூர் அருகே போதை சாக்லேட் விற்பனை: 2 பேர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் போதை சாக்லேட் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று (மார்ச் 20) அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த குஞ்சன் குமார் (21), மணீஷ் குமார் (21) இருவரும் போதை சாக்லெட் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News July 8, 2025
வேலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் வேலை

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிய வழக்கு பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் உள்ளிட்டோர் தேவை. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை www.vellore.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பிரபல ரவுடியான தினேஷ்குமார், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், கொலை, செம்மர கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 33 வழக்குகளில் தொடர்புடையவர். மேலும், ஆந்திரா, கர்நாடக போன்ற அண்டை மாநிலங்களிலும் இவர் மீது நிறைய வழக்குகள் உள்ளன. அவர் இருக்கும் இடத்தை அறிந்த தனிப்படை போலீசார், அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
News July 7, 2025
வேலூர்: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

வேலூர் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். (அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்.