News April 7, 2025
வேலூர் அங்கன்வாடி காலி பணியிடங்கள் கலெக்டர் அறிவிப்பு

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 207 அங்கன்வாடி பணியாளர், 6 குறு அங்கன்வாடி பணியாளர், 163 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஏப்ரல் 23-ம் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News October 29, 2025
வேலூரில் இப்படியா? பேரதிர்ச்சி!!

வேலூர் மாவட்டத்தில், கடந்த 10 மாதத்தில் 415 டீனேஜ் பிரசவம் ஆகியுள்ளார். மேலும் மாவட்டத்தில் 59 குழந்தை திருமணம் நடந்துள்ளது என நேற்று (அக்.28) நடந்த மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுக்ளது. குழந்தை திருமணத்தை ஒழிக்க அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்தியாவில் இது ஒரு பொதுவான நிகழ்வாகவே தோன்றுகிறது.
News October 29, 2025
வேலூரில் குற்ற வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் ஏலம்

வேலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆட்டோ நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் வரும் (அக்டோபர் 30 )அன்று காலை 8 மணி முதல் வசந்தபுரம் நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது ஏல முன்பணமாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 5000/-, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 10,000/- செலுத்தி கலந்து கொள்ளலாம் என வேலூர் மாவட்ட காவல்துறை செய்தியை வெளியிட்டுள்ளது.
News October 29, 2025
இரவு ரோந்து பணியில் பல்வேறு காவல் அதிகாரிகள்

வேலூர் மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை காவல்துறை ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் திரு.திருநாவுக்கரசு தலைமையில், வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு உள்ளிட்ட உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் சுன்னியப்பன், தயாளன், தமிழ்செல்வன், முத்துசெல்வன் ஆகியோர் தலைமையில் ரோந்து மேற்கொள்கின்றனர். அவசர உதவி: 100 / 8939754100.


