News September 14, 2024
வேலூரில் TNPSC தேர்வுக்கு 3464 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று (செப்டம்பர் 14) நடந்தது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 48 மையங்களில் குரூப்2, குரூப் 2ஏ தேர்வை 13139 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 9675 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 3464 தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News July 9, 2025
வெற்றி நிச்சயம் திட்டத்திற்கு தேவையான தகுதிகள் (2/2)

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்.
News July 9, 2025
வேலையில்லாதவர்களுக்கு ரூ.12,000 உதவித்தொகை (1/2)

வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், தங்கும் வசதி & ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். வேலூரில் விருப்பமுள்ளவர்கள் <
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? (2/2)

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️கட்டாயம் மொழிப்பாடமாக தமிழை படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!