News August 10, 2024
வேலூரில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு நேர்காணல் தேர்வு

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான நேர்காணல் இன்று ( ஆகஸ்ட் 10 ) நடந்தது. இதில் 3 மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது.
Similar News
News December 14, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.14) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News December 14, 2025
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு வேலூரில் டிரோன்கள் பறக்க தடை

ஜனாதிபதி திரவுபதி முர்மு வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு வருகை தருகிறார். இதை முன்னிட்டு வருகிற 17-ந் தேதி ஸ்ரீபுரம் தங்க கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
News December 14, 2025
வேலூர்: கடைஞாயிறு விழாவில் தள்ளுமுள்ளு!

அணைக்கட்டு தாலுகா விரிஞ்சிபுரத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு விழாவை முன்னிட்டு இன்று (டிச.14) நள்ளிரவு சிம்ம குளத்தில் நீராட ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது நுழைவு வாயில் உள்ளே செல்ல முண்டியடித்தனர். இதனை அங்கிருந்த போலீசார் தடுக்க முயன்றதால் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.


