News March 21, 2024

வேலூரில் வேட்பாளர் திடீர் மாற்றம்: புதிய திருப்பம்!

image

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் முருகன் என்பவருக்குப் பதிலாக மகேஷ் ஆனந்த் என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும், தேர்தல் பொறுப்பாளராக இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சல்மானை நியமித்து அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

Similar News

News November 21, 2025

தாசில்தாருக்கு சைக்கிள் ஓட்டி காண்பித்த தேர்வர்கள்

image

அணைக்கட்டு தாலுகாவில் 8 வருவாய் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 722 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு கடந்த 2-ந்தேதி எழுத்துத் தேர்வு நடந்தது. வருகிற 27-ந்தேதி வரை நாள் ஒன்றுக்கு 25 பேருக்கு தாலுகா அலுவலக வளாகத்தில் பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று ஆண்கள் மற்றும் பெண்கள் சைக்கிள் ஓட்டி காண்பித்தனர். தேர்வு பணியில் தாசில்தார் சுகுமாரன் ஆய்வு செய்தார்.

News November 21, 2025

வேலூர் ஆண்களுக்கு நவீன கருத்தடை முகாம்

image

வேலூர் மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் இன்று (நவ 21) முதல் வரும் 4-ம் தேதி வரை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண்களுக்கான இலவச குடும்பநல நவீன கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. சிகிச்சைக்கு பின் ஊக்கத்தொகை வழங்கப்படும். என மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

News November 21, 2025

வேலூர்: உள்ளாடையுடன் சில்மிஷம் செய்த நபர் கைது!

image

வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார்(23). இவர் மது அருந்திவிட்டு கடந்த 18ஆம் தேதி இரவு உள்ளாடையுடன் தெருக்களில் சுற்றித்திரிந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் காட்பாடி போலீசில் புகார் அளித்த நிலையில், நேற்று (நவ.20) அவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!