News August 16, 2024
வேலூரில் ரூ.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவில், 11 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த 583 அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் வழங்கினார். மேலும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.
Similar News
News November 19, 2025
வேலூர்: மகனை நினைத்து கவலை; உயிரை மாய்துகொண்ட தந்தை!

வேலூர் மாவட்டம், மூத்தக்கல் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (65), இவர் தன்னுடைய மன வளர்ச்சி குன்றிய மகனுக்கு திருமணமாகவில்லை என்ற மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் சில நாட்கள் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அதை கண்ட அக்கப் பக்கத்தினர் அவர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் (நவ18) உயிரிழந்தார் தகவல் அறிந்த தாலுகா போலீசார் வழக்கு போலீஸ் செய்தனர்.
News November 19, 2025
வேலூர்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

வேலூர் மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 19, 2025
வேலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

வேலுார் சாத்துமதுரையை சேர்ந்த யோகேஷ் (22), கேபிள் டி.வி.ஆபரேட்டர். இவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் யோகேஷ் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


