News April 16, 2024
வேலூரில் ரூ.1 கோடி: கலெக்டர் தகவல்
மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து நேற்று (ஏப்ரல் 15) வரை வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 10 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர்.
Similar News
News November 20, 2024
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது
அணைக்கட்டு பகுதியில் 9ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன், இளமதன், சின்னராசு, ஆகிய மூன்று பேர் கடந்த 16ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து சிறுமியின் தந்தை நேற்று (நவ 19) வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சிறுமியை வன்கொடுமை செய்த மூன்று பேரையும் தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர்.
News November 20, 2024
யானை தந்தம் பதுக்கிய வழக்கில் 9 பேர் அதிரடி கைது
வேலூர் மாவட்டம், அரியூரில் உள்ள ஒரு வீட்டில் யானை தந்தம் ஒதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் நடத்திய சோதனையில் யானைத் தந்தம் பதுக்கி வைத்திருந்த பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் சரத்குமார் (32), சம்பத் (57), மணிகண்டன் (37), குமார் (37), அனீப் (52), பழனி (68), தனபால் (63), ரவி (52), தரணிகுமார் (57) ஆகிய 9 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
News November 20, 2024
வேலூர் மாவட்டத்தில் 14 போலீசார் பணியிட மாற்றம் எஸ்பி உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் ஏட்டு மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி விருஞ்சிபுரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நடராஜன் சத்துவாச்சாரிக்கும், மேல்பாடியில் ஏட்டு சிவக்குமார் விருதுபட்டுக்கும் என மாவட்டம் முழுவதும் 14 போலீசாரை பணியிட மாற்றம் செய்து எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.