News August 24, 2024
வேலூரில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 31-ந் தேதி ஓட்டேரி முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 23, 2025
வேலூர்: பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

வேலூர் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 23, 2025
வேலூர் மக்களுக்கு முக்கிய அறிவுரை!

வேலூர்: மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டுவது ஆபத்தானது, எனவே அவற்றை தவிர்க்க வேண்டும் என வேலூர் மின் ஆய்வாளர் அறிவுறுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’மின்கம்பம், மின்மாற்றி அல்லது மின் இணைப்பு கம்பிகளுக்கு அருகே கால்நடைகளை கட்டுவது உயிரிழப்புக்கு காரணமாகலாம். ஆகையால், மழைக் காலங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
News October 23, 2025
வேலூரில் சிறப்பு திட்ட கண்காணிப்பு குழுக் கூட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மாவட்ட கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதல்வர் மருந்தகம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.