News April 3, 2025

வேலூரில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குடை, ரெயின் கோர்ட்டை கொண்டு செல்லுங்கள். ஷேர் செய்யுங்கள்.

Similar News

News October 28, 2025

வேலூர்: கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த அவலம்

image

வேலுார் மாவட்டம், வசந்தபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், எஸ்.பி., அலுவலகத்தில் தன் கணவர் மீது புகார் அளித்துள்ளார். அதன்படி பாகாயத்தைச் சேர்ந்த அருணாச்சலத்தை காதல் திருமணம் செய்து கொண்டதாகவும். பின், அவர் மைத்துனரின் ஆதரவால் பெண்ணின் குறைவை கலைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், வேலுார் வடக்கு போலீசார் பெண் அளித்த புகாரின் பெயரில் விசாரித்து வருகின்றனர்.

News October 28, 2025

வேலூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் (அக்.27) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

வேலூரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

image

வேலூரில் அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் நாளை (அக்.28) நடைபெற உள்ளது. இதனால் புதிய, பழைய பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன், சலவன்பேட்டை, ஆபிசர்ஸ்லைன், அப்துல்லாபுரம், கஸ்பா, கொணவட்டம், சேண்பாக்கம், விருதம்பட்டு, கொசப்பேட்டை, ஓல்டுடவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!