News August 27, 2024

வேலூரில் போக்சோ வழக்கில் கைதானவருக்கு குண்டாஸ்

image

வேலூர் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறையிலுள்ள சரவணன் (41) என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி மதிவாணன் மாவாட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் பேரில் நேற்று (ஆகஸ்ட் 26) சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.

Similar News

News October 16, 2025

வேலூர்: ஒரு புகாருக்கு ரூ.1,000-மிஸ் பண்ணாதீங்க!

image

வேலூர் மக்களே, நெடுஞ்சாலையில் நாம் உபயோகிக்கும் கழிவறைகள் பெரும்பாலும் முகம் சுளிக்க வைக்கும் வகையில்தான் உள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லையெனில், அதனை புகைப்படம் எடுத்து, <>’ராஜ்மார்க் யாத்ரா<<>>’ ஆப்பில் பதிவேற்றம் செய்தால், FAST TAG கணக்கிற்கு ரூ.1,000 வெகுமதியாக கிடைக்கும். உடனே இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 16, 2025

வேலூர்: தீபாவளிக்கு பட்டாசு வாங்க போறீங்களா?

image

வேலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ஆன்லைன் மூலமாக குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக வரும் விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். மேலும் இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது எஸ்பி அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ, இலவச எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கும் படி மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறது.

News October 16, 2025

வேலூர் மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (அக்-15) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 102 மதுபாட்டில்களை  பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!