News August 26, 2024

வேலூரில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

image

வேலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பேச்சுப்போட்டி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஆக 25) நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் வழங்கினார். இதில் எம்எல்ஏ கார்த்திகேயன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் திண்டுக்கல் லியோனி, மேயர் சுஜாதா உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News August 13, 2025

வேலூரில் 4,725 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

image

சென்னையில், 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. சென்னை போன்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை வேலூரில் 4,725 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக ரேபிஸ் தொற்றால் உயிரிழப்பு ஏற்படவில்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்.

News August 13, 2025

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க இங்கு போங்க

image

வேலூரில் இன்று (ஆகஸ்ட் 13) வேலூர், ஒடுக்கத்தூர், குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 12, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஆக.12) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!